அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் தான் முந்தைய அலைகளை ஏற்படுத்தின. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில்