கனமழையால் மூழ்கிய பயிர்கள் : எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை உடனடியாக பாதுகாக்கவும், பயிர் சேத விவரங்களை நேரில் கண்டறிந்து