அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

Posted by - March 15, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 20 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னர் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. முதலில் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இறுதியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமுக முடிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து

Read More

விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு – நாகையில் ஆளூர் ஷாநவாஸ் களமிறங்குகிறார் !

Posted by - March 14, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ் காட்டுமன்னார்கோவில் – சிந்தனைச்செல்வன் வானூர் – வன்னிஅரசு அரக்கோணம் – கவுதம சன்னா திருபோரூர் – S.S. பாலாஜி செய்யூர் – பனையூர் பாபு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 14, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து தளி – ராமச்சந்திரன் திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன் பவானிசாகர் – சுந்தரம் வால்பாறை – ஆறுமுகம் சிவகங்கை – குணசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 14, 2021

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி பொன்னேரி- துரை சந்திரசேகர் ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை சோளிங்கர்- முனிரத்தினம் ஊத்தங்கரை- ஆறுமுகம் கள்ளக்குறிச்சி-

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 13, 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173

Read More

அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)

Posted by - March 12, 2021

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திகாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது. மேலும், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு

Read More

திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 12, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளில் கொமதேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்செங்கோட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பெருந்துறையில் பாலூசாமி, சூலூரில் பிரிமியர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் கொமதேக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !

Posted by - March 12, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாபநாசத்தில் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ்வும், மணப்பாறையில் மமக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமதும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவ்விருவருமே உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மக்கள் நீதி மையத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 12, 2021

43 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் அக்கட்சி தலைவர் கமல்ஹாசனால் இன்று வெளியிடப்பட்டது. இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், பழ.கருப்பையா தி.நகர் தொகுதியிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. இந்த கட்சி கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ம.நீ.ம முதல் வேட்பாளர் பட்டியலில் 70 பேரின் பெயர்கள் இருந்தன. தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கட்சித்தலைவர்

Read More

எஸ்டிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 12, 2021

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி திருச்சி மேற்கு, மதுரை மத்தியம், திருவாரூர், ஆம்பூர், ஆலந்தூர், பாளையங்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, பாளையங்கோட்டை – நெல்லை முபாரக் ஆம்பூர் – அச. உமர் பாரூக் மதுரை மத்தி – சிக்கந்தர் பாட்சா திருவாரூர் – நசிமா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)