தமிழகத்தில் தீர்மானம் இல்லை : மும்முரத்தில் மூன்றாம் கட்ட போராட்டம்!!

Posted by - March 12, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கும் மத்திய அரசுக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை கண்டித்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் குரல் கொடுத்து வந்தனர். முதல் கட்ட போராட்டம் தொடர்ந்து, கண்டனப் பேரணிகள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, தேசிய கோடி ஏந்தி

Read More

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!! (படங்கள்)

Posted by - March 11, 2020

மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பல்வேறு அரசியல் எதிர் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், தமிழக ஆரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்

Read More

CAA-NRC-NPR சட்டங்களை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் – தமிழக அரசு அறிவிப்பு !

Posted by - March 11, 2020

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு NPR ,NRC குறித்து தீர்மானம் நிறைவேற்றாது.

Read More

CAA போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் !

Posted by - March 6, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்கவில்லை என மூத்த வழக்கறிஞர்கள் நேற்று உயர்நீதிமன்ற அமர்வில் முறையிட்டனர். இதையடுத்து அந்த மனு இன்று அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யவேண்டும் என நேற்று பிறப்பித்த உத்தரவை வரும்

Read More

முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை !

Posted by - March 6, 2020

இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார். டெல்லி கலவரம் காரணமாக இந்தியா ஈரான் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு உறவில் இதனால் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது. கடந்த வாரமே டெல்லி கலவரம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக

Read More

மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி !

Posted by - March 4, 2020

மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி வசிக்கும் அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியில் பங்கேற்றார். அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் இடதுசாரிகள், அமித்ஷாவே திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்பி போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அமித்ஷா வருகைக்கு எதிராக வானில்

Read More

அதிரை ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தின் இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 4, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய(04/03/2020) அரங்கில், தமிழக வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, தமிழக மக்கள் பண்பாட்டு கழக மீத்தா பாண்டியன், நாம் தமிழர் கட்சி காளியம்மாள், ராவியத் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளார்கள்.

Read More

அதிரையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 3, 2020

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய(03/03/2020) அரங்கில், நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக், திருமதி சபரிமாலா, ஊடகவியலாளர் ரியாஸ் அஹமது, இஸ்லாமிய அழைப்பாளர் நஜ்முதீன், திரைப்பட இயக்குனர் மு. களஞ்சியம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.

Read More

தொண்டியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Posted by - March 3, 2020

CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய ஷாஹீன் பாக் போராட்ட அரங்கில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீஃப், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயலாளர் யாசிர் அரஃபாத் இம்தாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகபூபதி

Read More

அமித் ஷா பேரணியில் ‘கோலி மாரோ’ என வன்முறை கோஷம் எழுப்பியவர்களை தேடி தேடி கைது செய்யும் கொல்கத்தா போலீஸ் !

Posted by - March 3, 2020

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கொல்கத்தா பேரணியில் பங்கேற்றவர்கள் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க என கோஷம் எழுப்பியிருந்தனர். தற்போது இந்த கோஷத்தை எழுப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மேற்கு வங்க அரசு. சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கோலி மாரோ என கோஷம் எழுப்பினர். அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம். பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)