அதிரை பெரிய ஜுமுஆ பள்ளிவாயிலில் போட்டிபோட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர்-அமமுக!

Posted by - March 27, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளிவாயிலில் ஜுமுஆ தொழுகை முடிந்து வருபவர்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்காக அமமுக கூட்டணி கட்சியினர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் கீர்த்திகா அன்புவிற்காக நாம் தமிழர் கட்சியினர் என

Read More

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு !(முழு விவரம்)

Posted by - March 14, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை

Read More

வீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் – அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

Posted by - March 13, 2021

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Read More

அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)

Posted by - March 12, 2021

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திகாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது. மேலும், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு

Read More

அதிரையில் களைக்கட்ட துவங்கிய தேர்தல் பணிகள் – அமமுக அலுவலகத்திற்கு வருகை தந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் !

Posted by - March 11, 2021

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் எஸ்டிபிஐ கட்சி மதுரை மத்தியம், பாளையங்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட6 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமாடும் இக்கட்சிகள் பரஸ்பரம் தங்களின் அலுவலகங்களுக்கு விஜயம் செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு அதிரை அமமுக அலுவலகம் சென்ற அதிரை SDPI கட்சியின் நிர்வாகிகளை அமமுக நகர கிளை நிர்வாகிகள்

Read More

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கோவில்பட்டியில் களமிறங்குகிறார் தினகரன் !

Posted by - March 11, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் டிடிவி. தினகரனின் அமமுக, ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே அமமுக சார்பில் 15 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், இன்று

Read More

JustIn : அமமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது எஸ்டிபிஐ !

Posted by - March 11, 2021

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் பரவியது. இந்நிலையில் திடீர் திருப்பமாக டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இன்று அமமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு போட்டியிடும் தொகுதிகளும் உறுதியானது. அதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர்,

Read More

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 10, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 15 பேர் அடங்கிய அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கின்றது. அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக துணை தலைவருமான எஸ். அன்பழகன் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். அதேபோல, அமமுக துணை பொதுச்செயலாளரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)