இருந்த ஒன்னும் போச்சு – கேரளாவில் வாஷ்அவுட் ஆன பாஜக!
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கெத்தாக களம் இறங்கியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளும் கட்சிக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டும் என்று களம் கண்டது. இந்த முறையாவது கேரளாவில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று பாஜக தனியாக கோதாவில் குதித்தது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான