ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக.. படுதோல்வியடைந்த அதிமுக.. காணாமல் போன கட்சிகள்!
நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக