அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியாளர்களே : இதை உடனே பண்ணுங்க!!

Posted by - May 10, 2021

ஹிஜ்ரி 1442 ரமலான் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அதிரை எக்ஸ்பிரஸ் தேர்வுக் குழு தயார் செய்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்களில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெறும் நபர்களின் பெயர்களும், ஆறுதல் பரிசுக்கு தகுதியான போட்டியாளர்களின் பெயர்களும் விரைவில் அதிரை எக்ஸ்பிரஸ் இறுதி செய்து இணையத்தில் வெளியிட உள்ளது. இதனையடுத்து போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களது AX (பதிவு எண்) Register Number, பெயர், த/பெயர், ஊர் சரியாக

Read More

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு – அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு !

Posted by - May 9, 2021

அதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து முறையான முன் அறிவிப்பு ஏதுமின்றி இம் மின்வெட்டு தொடரும் நிலையில், மின்வாரிய தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் இல்லை. அது போக மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற தகவல். இதனால் விரக்தியடைந்த மின்

Read More

திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே அதிரையில் மின்தடை! பெருநாள் தினத்தன்றும் மின்தடை தொடருமா??

Posted by - May 7, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரையில் சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்ட நிலையில்,   பகலில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நிலவியது.  மின்தடைக்கான காரணம் குறித்து விசாரித்த வகையில்,  பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் மின்பாதைகளில் புதிய லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதனாலேயே மின்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ரமலான் மாதத்தில் இவ்வாறு தொடர்

Read More

சென்னையர்களை தனிமைப்படுத்துங்கள்!

Posted by - May 7, 2021

வேகமாக பரவி வரும் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கம் சென்னையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வியாபாரம், கல்விக்காக சென்னை சென்ற அதிரையர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக நோய் பரவும் ஊர்களில் இருந்து இதர ஊர்களுக்கு செல்வதை தடுத்து இஸ்லாமிய தூதர் அறிவுரை கூறி இருக்கிறார்கள். இதனை செவி ஏற்காத சில சுயநல நபர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகுகிறார்கள். அப்படி வருபவர்களில்

Read More

பிலால் நகர் வடிகால் பணி துவங்கியது!!

Posted by - May 6, 2021

ஏரிபுரக்கரை எல்லைக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் வசதி,சாலை வசதி ஆகியவற்றை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனிடையே தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்பணி தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அப்பணியை விரைந்து முடித்து சாலைகளை செப்பனிட வேண்டும் என கவுன்சிலர் ஜாஸ்மின் கமாலிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்களுக்கு

Read More

அதிரையில் இரண்டு மணி நேர மின் தடை முன்னறிவிப்பு !

Posted by - May 4, 2021

அதிராம்பட்டிணத்தில் உள்ள 33KV துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் நாளை(05/05/2021) காலை 10 மணி முதல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறும் இரண்டு மணி நேரம் ஊழியளுக்கு தேவைய்ற்ற தொலைப்பேசி அழைப்புகள் செய்ய வேண்டாம் என அதிராம்பட்டிணம் துணை மின் பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.

Read More

அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!

Posted by - May 3, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக கூட்டணியின் என்.ஆர். ரெங்கராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை மொத்தம் 77,698 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன் 53,169 வாக்குகளும், சுயேட்சை

Read More

மரண அறிவிப்பு : S.M. அஜ்மல் கான் அவர்கள்!

Posted by - May 3, 2021

மரண அறிவிப்பு : மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் S.M. அபூ உபைதா அவர்களின் மகனும், S.M. ரபி அகமது, S.M. தாஜிதீன் ஆகியோரின் சகோதரருமாகியா S.M. அஜ்மல் கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)