அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது. எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டுகளில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 8 வார்டுகளில் SDPI கட்சிக்கு 5 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு