அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குதிசை காற்றின்