அதிரையில் இறுதிக்கட்டத்தை எட்டிய ஆதார் சிறப்பு முகாம்! பயன்படுதிக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு!!

Posted by - June 21, 2022

அதிரை மக்களின் தேவையற்ற பொருட்செலவு மற்றும் அலைச்சலை தவிர்க்க ஏதுவாக இம்தாத் இந்தியாமற்றும் தபால்துறை இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தி வருகின்றன. புதுமனைத்தெருவில் உள்ளஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்த ஆதார் சிறப்பு முகாமில் 700க்கும் மேற்பட்டோர்பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு முகாம் நிறைவு பெறஇருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுமற்றும் மேலதிக தகவல்களுக்கு +91 9944046001 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.

Read More

SSMG கால்பந்து தொடர் : நாகூரிடம் மண்டியிட்ட மதுரை!!

Posted by - June 21, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதிரையில் பலத்த மழையின் காரணத்தினால் கடந்த 4 நாட்களாக கால்பந்து தொடர் போட்டி நடைபெறவில்லை. இத்தொடரின் 5ம் நாளான இன்று மதுரை – United Fc நாகூர் அணிகள் மோதினர். இப்போட்டியில் நாகூர் அணி 4 – 0 என்கிற கோல் கணக்கில் மதுரையை

Read More

SDPI கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா – அதிரையில் 10இடங்களில் கொடியேற்றம்-

Posted by - June 21, 2022

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் 14 ஆண்டு விழா நாடெங்கிலும் உள்ள கிளைகளில் இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி அதிராம்பட்டினம் கிளையின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது. நகர தலைவர் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமன்ஸ் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன் கலந்து கொண்டு கொடியேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வண்டிப்பேட்டை, மெயின் ரோடு,சேர்மன் வாடி உள்ளிட்ட பத்து இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் துணை

Read More

அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

Posted by - June 21, 2022

கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ். தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)