முத்துப்பேட்டை : ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு – அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சு –
முத்துப்பேட்டை ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேசன் புனரமைப்பு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வேஎர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு வாராந்திர ரயிலை அறிமுகம் செய்தது ஆனால் இந்த சிறப்பு ரயில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை இதனால் முத்துப்பேட்டை நகர வியாபாரிகள் பொதுமக்கள் குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற தர்காவுக்கு வந்து செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.