அதிரை KMC கல்லூரியின் 67ஆம் ஆண்டு விழா – ஆளுர் ஷாநவாஸ் MLA பங்கேற்றார்-
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் 67ஆம் ஆண்டு கல்லூரி விழா 11-06-2022 அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் மீரா சாஹீப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாகை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மற்றும் ,வக்ஃப் வாரிய குழு உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். அப்போது பேசிய அவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி என்பது தன்னலம் பாராத அன்றைய நல்லோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் இவ்வளவு ஆண்டு காலம் கல்வி சேவை வழங்கி