பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!

Posted by - June 3, 2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன், தங்களை காக்க யாரும் வர போவதில்லை, தாங்களே வீதிக்கு வந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கூறுவதாக தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளை முடக்கினாலும் பாப்புலர் ஃப்ரண்ட் பணியை முடக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய  SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேக்கு அடுத்து அதிக நிலங்களை கொண்ட அமைப்பு வக்ப் வாரியம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அடித்தால் திருப்பிஅடி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என சுட்டிக் காட்டிய அவர், பாஜக-வின் கருப்பு முருகானந்தம் வைத்திருக்கும் கோடி கோடியான கருப்பு பணத்தை அமலாக்கத்துறை சோதனையிட தயாரா? என அந்த துறைக்கு சவால்விடுத்தார்.

Read More

அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-

Posted by - June 3, 2022

அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்… தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் திருப் பணிகள் நிறைவுற்று செட்டிதோப்பு கிராம பஞ்சாயத்தார்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இந்நிலையில் யாகசாலை அமைத்து கடந்த புதன்கிழமை முதல் பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)