அதிரையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை வகுப்பு நாளை துவக்கம்!

Posted by - May 20, 2022

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாளை தொடங்க இருக்கும் இந்த முகாமுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் காலை 8:45 மணிக்குள் வருகை தந்துவிட வேண்டும்.

Read More

அதிரையில் துண்டிக்கப்பட்ட சாலை! குழாய் கூட போட முடியாத பரிதாப நிலையில் நகராட்சி நிர்வாகம்!!

Posted by - May 20, 2022

கடந்த பருவமழை சமயத்தில் ஒருநாள் மழைக்கே அதிரையின் பிரதான தெருக்களில் நீர் தேங்கியது. அப்போது நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசர அவசரமாக வடிகாலை தூர்வாரினர். அந்த சமயத்தில் சேது ரோட்டிலிருந்து புதுத்தெரு தென்புறத்திற்கு செல்ல கூடிய சாலை துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையை மீண்டும் சேது சாலையோடு இணைக்க உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவசர காலங்களில் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் தொடர்கிறது. இதுகுறித்து

Read More

மரண அறிவிப்பு (பறக்கும்படை என்கிற ஹாஜி ஜமால் முஹம்மது).

Posted by - May 20, 2022

நாள் :20-05-2022 பழைய போஸ்ட்டாபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் தென்னம் பிள்ளை அகமது ஹாஜா அவர்களின் மகனும், பி.மு.சி மீரா லெப்பை அவர்களின் மருமகனும் மர்ஹும் தாஜ் முகம்மது, மர்ஹும் அப்துல் ஹக்கிம்,கிஜார் முஹம்மது அவர்களின் சகோதரும், மர்ஹும் முகம்மது ரஹ்மத்துல்லா, உமர் அலி, அப்துல் ஹக் ஆகியோரின் மாமனாரும், நெய்னா முகம்மதுவின் தகப்பனாருமாகிய பறக்கும்படை என்கிற ஜமால் முஹம்மது வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 8மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)