ஆதிநாதன் அறிக்கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் – தாம்பரம் யாக்கூப் வலியுறுத்துல் –
அதிராம்பட்டினம் தமுமுக – மமக சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆல்லோசனைகளை வழங்கினார். அப்போது நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்த யாக்கூப் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆதிநாதன் விசாரனை நிரைவடைந்த நிலையில், அதன் அறிக்கை குறித்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், சிறைவாசிகள் விடுதலையில் தமுமுக- மமக முழு அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறது என்றார்.