பட்டம் பறக்குது.. பிப்ரவரில பள்ளிகூடம் திறக்குது..
தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிக், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க