அதிரை அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவை! ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் கோரிக்கை !!
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. பன்னெடுங்காலமாக செயல்பட்டு வரும் இக்கல்வி ஸ்தாபனத்தில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழுதடைந்த வகுப்புகளை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என கூறப்பட்டது. ஆனால் போதிய அளவு வகுப்பறைகள் கட்டப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையினால் நீர் வகுப்பறைகளை சூழ்ந்தது. இதனால் மாணாக்கர்கள்