கட்டுமானப்பொருட்கள் விலையேற்றம்.. அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு!

Posted by - June 16, 2021

கட்டுமான பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை முடிந்து, தற்போது இயல்புநிலை மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பொருட்களின் நிலை மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செயற்கையான விலையேற்றம் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னை தலைமைச்

Read More

அதிரையில் குறிவைக்கப்படும் பருவ வயது சிறுவர்கள் : சந்துக்குள் சம்பவம் செய்யும் அவலம் : உஷார் ரிப்போர்ட்!!

Posted by - June 16, 2021

அதிராம்பட்டினத்தில் சுற்றித்திரியும் மன நோயாளிகளையும், பருவமெய்திய சிறார்களையும் குறிவைத்து சில ஓரினச் சேர்க்கையாளர்கள் வட்டமடித்து வருகிறார்கள். இவர்கள் அந்த மன நலம் குன்றிய இளைஞர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து தனது காம இச்சையை தனித்து கொள்வதாக ஆதாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட சிலரிடம் வினவியபோது திடுக்கிடும் பல தகவல் கிடைத்து இருக்கின்றன. நாகரிகம்,குடும்ப பின்னனி ஆகியவைகளால் இதனை பகிரங்க படுத்தாவிட்டாலும், தனித்தனியே அறிவுறுத்தி வருகிறோம். அதேபோல் மன நலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்களை

Read More

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாடு பலி – உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

Posted by - June 16, 2021

அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஏராளமான மாடுகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றுமாலை ஏராளமான மாடுகள் சாலையோரம் உள்ள புல்களை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாட்டின் மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தன. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினால் மாடு வளர்ப்போருக்கு அறிவுரை கூரியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. மாடுதானே என மெதனமாக இருக்கும் மாடு வளர்ப்போர், அதனை ஒரு

Read More

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் நூதன போராட்டம்..

Posted by - June 16, 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல் டீசல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசு அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் மல்லிபட்டினம் தாஜூதீன் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள்

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகைத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

Posted by - June 16, 2021

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நிவாரணமாக 2ம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை இம்மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டித்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கொரோனா நிவாரணமாக

Read More

மல்லிப்பட்டிணம் நலமன்றம் சார்பாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அளிப்பு..!

Posted by - June 16, 2021

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் சமுதாய நல மன்றம் சார்பாக 65 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர். கொரோனா ஊரடங்கினால் பாதிகப்பட்டு வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும்,ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என சமுதாய நல மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதில் வீட்டிற்கு தேவையான அரிசி,சமையல் எண்ணெய்,பருப்பு,உப்பு,சீனி, மசாலா வகைகள் உள்ளடக்கிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இருந்தன. இவைகள் அடங்கிய 65 நிவாரண பொதிகள்

Read More

மல்லிப்பட்டிணம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் நிவாரண தொகை வழங்கல்..!

Posted by - June 16, 2021

தஞ்சாவூர் மாவட்டம் சரபென்றராஜன்பட்டினம் ஊராட்சியின் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் கொரோனா பேரிடர் கால இரண்டாம் கட்ட நிவாரணத்தொகை ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக நான்காயிரம் ரூபாய் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த மே மாதம் முதற்கட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் ஜூன் 15 முதல் வழங்கப்பட்டு வருகிறது, இதோடு 14 வகையான நிவாரணப் பொருட்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)