கொரோனா தடுப்பூசிக்கு 5% GST தொடரும் – ஒன்றிய நிதியமைச்சர் அறிவிப்பு!

Posted by - June 12, 2021

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். பின்னர், கடந்த மே 28ம் தேதி 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து

Read More

உய்குர் முஸ்லீம்கள் மீதான சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு ‘புலிட்சர்’ விருது!

Posted by - June 12, 2021

சீனாவில் முஸ்லீம்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலன் புலிட்சர் விருது பெற்றுள்ளார். பஸ்ஃபீட் என்ற செய்தி நிறுவனத்திற்காக இந்த செய்தியை உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் மேகா. சர்வதேச ரிப்போர்ட்டிங் பிரிவில் மேகாவுக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது. சீனாவின் மேற்கு எல்லையிலுள்ள பகுதி ஜின்ஜியாங். மங்கோலியா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 நாடுகள் இதனுடன் எல்லையை பகிர்கின்றன. 1949ம் ஆண்டு முதல் ஜின்ஜியாங் பகுதி, சீனாவின்

Read More

அதிரையில் வாட்டிய வெயிலை, துரத்திய மழை!!

Posted by - June 12, 2021

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் மிகவும் சிரமமுற்று வந்த நிலையில், இன்று (12.06.2021) மாலை 6 மணிக்கு ஒன்று கூடிய கருமேகக்கூட்டங்கள், வெயிலில் வாடிய அதிரை மக்களுக்கு வரப்பிரசாதமாக இடியுடன் குளுகுளு மழையை கொடுத்துள்ளது. இதனால் வெப்பம் தனிந்து அதிரை மக்கள் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.

Read More

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

Posted by - June 12, 2021

குறுவை சாகுபடி பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை தண்ணீரை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 97.33 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. வழக்கமாக மேட்டூர் அணை நீர்

Read More

அதிரை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

Posted by - June 12, 2021

அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம் மூலம் முன்னரே அறிவித்திருந்தனர். அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களின் அனைத்து ஆவணங்களோடு ஓட்டுனர் உரிமம் போன்றவற்றின் நகலை சமர்ப்பித்து ஒரு சாட்சியை கூட்டி வருவதோடு இருவரின் கையோப்பமும் பெற்று அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் வாகனங்கள் விடுவிக்கபடுகிறது. முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது

Read More

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னென்ன ?

Posted by - June 12, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில மாவட்டங்களில் பாதிப்பு அதே நிலையில்தான் உள்ளது. அதனால், பாதிப்பு குறையாத மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தும், பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்தும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய

Read More

திருச்சியில் கார் ஊழியருக்கு மிரட்டல் – சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது!

Posted by - June 12, 2021

திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரில் பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த வினோத் என்ற கார் நிறுவன ஊழியர் ஒருவர் செய்த டிவிட் காரணமாக இன்று பிற்பகலில் மிரட்டப்பட்டார். எல்டிடிஇ பிரபாகரன் குறித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)