மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

Posted by - June 5, 2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய மண்டல ஐஜி-யாக பணியிடமாற்றம் செயய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திருச்சியில் உள்ள அலுவலகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக(ஐஜி) வி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இவர் திருச்சி சரக டிஐஜி-யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிரை: முதல்வரின் கொரோனா நிதிக்கு MKN மதரஸா டிரஸ்ட் 1லட்சம் நிதியளிப்பு !!

Posted by - June 5, 2021

கொரொனா நிவாரணத்திற்கு நிதி கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்து நிதிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்ட் சார்பில் அதன் செயலர் S. முகமது மீரா சாகிப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாத்துரை அவர்களிடம் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதனை பெற்றுகொண்ட அண்ணாத்துரை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் MKN மதரஸா டிரஸ்ட் தலைவர்

Read More

அதிரையில் தேவாலய கண்ணாடிகள் உடைப்பு!!குற்றவாளிகளை பிடிக்குமா காவல்துறை?

Posted by - June 5, 2021

அதிரை காவல் நிலையத்தின் பக்கவாட்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயம் அமைந்துள்ளது. ஊராடங்கினால் மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயத்தின் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் இத்தகைய செயல் காவல் நிலையம் அருகிலேயே நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிரை தேவாலயத்தில் கண்ணாடிகள் உடைக்கப்படுவது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அதிரையரை காணவில்லை : தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த கோரிக்கை!!

Posted by - June 5, 2021

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் அய்யூப் கான் அவர்களின் மகன் சிராஜ் (வயது 27) என்பவர் லடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழே உள்ள மொபைல் எண்ணுக்கு தகவல் தருமாறு அவரது குடும்பத்தார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெயர்: சிராஜ் த/பெ: அய்யூப்கான் தாயார் பெயர்: சபீனா அம்மாள் தொலைபேசி எண்: 9944362457

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)