மரண அறிவிப்பு:- ஊசியப்பா என்கிற அப்துல் மஜீது.!

Posted by - June 3, 2021

அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் E.M. முஹமது நூர்தீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் ,முஹமது நூர்தீன், மர்ஹூம் சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் காதர் சுல்தான் இப்ராஹீம்ஷா ஆகியோரின் மச்சானும், முஹமது அமீன் அவர்களின் மாமனாரும், சாகுல் ஹமீது, மர்ஹூம் சைபுதீன், நிஜாருதீன், மர்ஹூம் இம்தாத், முஹமது ஆசிக் ஆகியோரின் தகப்பனாருமான ஊசியப்பா என்கிற அப்துல் மஜீது அவர்கள் இன்று(03-06-2021) இரவு பிலால் நகர்

Read More

அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!

Posted by - June 3, 2021

அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த நிர்வாகியும் எங்கள் அன்பு தம்பியுமான MA சாதீக் பாட்ஷா இறை அழைப்பை ஏற்று கொண்டுவிட்டார் என்ற செய்தி என்னை நிலை குழைய செய்து விட்டன. சமூகத்திற்கு சங்கடங்கள் ஏற்படும் போதெல்லாம் சளைக்காமல் களமாடும் என் அன்பு தம்பி இறைவனடி சேர்ந்தார் என்றால்

Read More

மரண அறிவிப்பு – மமக சாதீக்!

Posted by - June 3, 2021

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் MA அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், மர்ஹும் MAC முத்து மரைக்காயர் அவர்களின் மருமகனும், MA,தாஜிதீன்,MA. புகாரி,MA ஜாஹிர் உசேன் MA அன்வர் சதாத், இவர்களின் சகோதரரும் KK ஹாஜா,கா.மு. அப்துல் காதர்,சா.பா அப்துல் ரஜாக் இவர்களின் மைத்துனரும்,அப்துல் ரஜாக்,சபீர்கான்,சபீக் அஹமது இவர்களின் தகப்பனாருமான MA சாதீக் பாட்சா வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

B.Sc., விலங்கியல் படிக்கலாமா? அதிரை சாதிக் சார் விளக்கம்!!

Posted by - June 3, 2021

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறையில் உதவி பேராசிரியராக முனைவர் O. சாதிக் 17 ஆண்டுகளாக பணிப்புரிந்து வருகிறார். மாணவர்களிடம் சாதிக் சார் என்று அதிரைவாசிகளால் அறியப்பட்ட இவர், அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கும் தற்போது +2க்கு பிறகு B.Sc., Zoology கைகொடுக்குமா? என்பது பற்றி தெளிவாக எளிய நடையில் விளக்கியுள்ளார்.

Read More

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்..!

Posted by - June 3, 2021

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி மதராஷாவில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த பரிசோதனை முகாமிற்கு அழகியநாயகிபுரம் மருத்துவர் ஜனனி தலைமை தாங்கினார்.இரண்டாம்புளிக்காடு கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து முன்னிலை வகித்தார்.இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் சுகாதர ஆய்வாளர் முகுந்தன், மல்லிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதர செவிலியர் மாலதி மற்றும் கிராம உதவியாளர்கள் ராஜபாண்டி,சுதாகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Read More

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!!

Posted by - June 3, 2021

ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)