கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்!

Posted by - May 7, 2021

கொரோனா தொற்று பரவல் கர்நாடகாவில் மிகவும் உச்சமடைந்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடாகவில் இன்று ஒரே நாளில் 48,781 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 28623 பேர் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் குணமாகி உள்ளனர். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு

Read More

திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே அதிரையில் மின்தடை! பெருநாள் தினத்தன்றும் மின்தடை தொடருமா??

Posted by - May 7, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரையில் சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்ட நிலையில்,   பகலில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நிலவியது.  மின்தடைக்கான காரணம் குறித்து விசாரித்த வகையில்,  பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் மின்பாதைகளில் புதிய லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதனாலேயே மின்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ரமலான் மாதத்தில் இவ்வாறு தொடர்

Read More

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக அனுபவம் வாய்ந்த இறையன்பு ஐஏஎஸ் நியமனம்!

Posted by - May 7, 2021

திமுக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முக்கியமாக தலைமை பொறுப்புகளை வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மிக கவனமாக ஸ்டாலின் தேர்வு செய்து வருகிறார். அதன்படி முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரும் முதல்வரின் முதன்மை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த

Read More

பதவியேற்பு விழா : எந்த அமைச்சரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் காலில் விழவில்லை!

Posted by - May 7, 2021

தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் யாரும் முதலமைச்சர் காலில் விழவில்லை என்பது இன்றைய தினம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது. பொதுவாக இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு தலைமைக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு காலில் விழுந்து வணங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சுயமரியாதையை கொள்கையாக பின்பற்றுவதாலோ என்னவோ இந்தச் சடங்குகளை திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் காண முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் அனைவரும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்

Read More

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - May 7, 2021

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோணா வியூகம் எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். வியாழக்கிழமையான நேற்று, நாடு மற்றொரு கொரோனா உச்சம் எட்டியது. 4.14 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 3,927 இறப்புகள் பதிவாகின. கடந்த 10

Read More

சூப்பர் ஐஏஎஸ் டீம் – முதல்வரின் தனிசெயலாளர்களாக உதயச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமனம்!

Posted by - May 7, 2021

முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கல்வித்துறையில் பல முன்னெடுப்புக்களை கொண்டுவந்து வெகுவாக புகழடைந்தவர். அமைச்சரவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிகாரிகள் குழு ஒரு முதல்வருக்கு முக்கியம். தலைமைச் செயலாளர் யார் என்பது இந்த விஷயத்தில் முக்கியத்துவம் தருவதாக இருக்கும். இது தவிர முதல்வரின் அலுவலகத்தில் யார் யார் அதிகாரிகளாக இருக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் விரைவாகவும், சிறப்பாகவும் இருப்பதை தீர்மானிக்கும். உதயச்சந்திரன்

Read More

மரண அறிவிப்பு-மரியம்மா வீட்டு சாதீக்!

Posted by - May 7, 2021

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷாஹுல் ஹமீது, அவர்களின் மகனும், தமீம் அன்சாரி,ரஃபீக் அஹமது, தஃபீக் அஹமது இவர்களிந் சகோதரரும்,செய்யது, அப்துல் ஹமீது இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் ஷிகாபுதீன் அவர்களின் மருமகனும், ஜமாலுதீன்,கமாலுதீன்,ஜலாலுதீன் இவர்களின் மச்சானுமாகிய மரியம்மா வீட்டு சாதிக் கத்தார் நாட்டில் வஃபாத் ஆகிவிட்டர்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் அனாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

முதல்நாளே அதிரடி – தேர்தல் வாகுறுதிகளில் 5ல் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Posted by - May 7, 2021

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு

Read More

சென்னையர்களை தனிமைப்படுத்துங்கள்!

Posted by - May 7, 2021

வேகமாக பரவி வரும் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கம் சென்னையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வியாபாரம், கல்விக்காக சென்னை சென்ற அதிரையர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக நோய் பரவும் ஊர்களில் இருந்து இதர ஊர்களுக்கு செல்வதை தடுத்து இஸ்லாமிய தூதர் அறிவுரை கூறி இருக்கிறார்கள். இதனை செவி ஏற்காத சில சுயநல நபர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகுகிறார்கள். அப்படி வருபவர்களில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)