பட்டுக்கோட்டையில் சூரியனின் வெப்பத்தில் கருகிப்போன இலை!(வாக்கு எண்ணிக்கை முழு விவரம்)

Posted by - May 2, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. அண்ணாதுரை, அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரசின் என்.ஆர். ரெங்கராஜன், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வம், நாம் தமிழர் சார்பில் கீர்த்திகா அன்பு, மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர். சதாசிவம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை,

Read More

ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் படுதோல்வி!

Posted by - May 2, 2021

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் 11 அமைச்சர்கள் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவில் இருந்தனர். அதில் ஒருசிலர் கரைசேர்ந்து விட்டாலும் ராஜேந்திர பாலாஜி, கே.சி. வீரமணி ஆகிய

Read More

பட்டுக்கோட்டை கொரோனா மையம்: வேகாத கிச்சடியால் வெடித்தது போராட்டம் !

Posted by - May 2, 2021

வீதியில் இறங்கிய தொற்றாளர்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் விரைவு ! பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 120க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு இன்றுகாலை உணவாக கிச்சடி வழங்கியுள்ளனர் அது சுவை மாறிய நிலையில் இருந்துள்ளன இதனால் பெரும்பாலான நோயாளிகள் அதனை தவிர்த்து உள்ளனர். இந்த நிலையில் மதிய உணவாக தக்காளி சாதமும,இரவு உணவாக உப்பமாவும் வழங்கி உள்ளனர். இதனால் கொதிதெழுந்த தொற்றாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த

Read More

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

Posted by - May 2, 2021

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணும் பணியானது தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 68,737 வாக்குகளும், திமுக வேட்பாளர்

Read More

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி!

Posted by - May 2, 2021

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக

Read More

நாகையில் ஆளூர் ஷா நவாஸ் வெற்றி!

Posted by - May 2, 2021

திமுக தலைமையிலான கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தங்க. கதிரவன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாகப்பட்டினம் தொகுதியில்

Read More

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!

Posted by - May 2, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 161 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 72 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 161 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. திமுகவின் இந்த

Read More

இணையத்தில் ட்ரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக்!

Posted by - May 2, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 154 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 79 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி திமுக

Read More

கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் சரித்திர சாதனை – மீண்டும் முதல்வராகிறார் பினராயி விஜயன்!

Posted by - May 2, 2021

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்டுகள் 93

Read More

பட்டுக்கோட்டையில் இரட்டை இலைக்கு டஃப் கொடுக்கும் பலாப்பழம்!!

Posted by - May 2, 2021

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நண்பகல் நிலவரப்படி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை 16,067 வாக்குகளும், அதிமுக சின்னத்தில் என்.ஆர்.ரெங்கராஜன் 10,535 வாக்குகளும், சுயேட்சை பாலகிருஷ்ணன் 5,390 வாக்குகளையும் பெற்றுள்ளன. முன்னதாக என்.ஆர்.ரெங்கராஜனின் வாக்குகளை பாலகிருஷ்ணன் பிரித்துவிடுவார் என சொல்லப்பட்டு வந்தது. அதன்படியே அதிமுகவுக்கு பலாப்பழம் டஃப் கொடுத்து வருகிறது. கா.அண்ணாதுரைக்கும், என்.ஆர்.ரெங்கராஜனுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5,532 மட்டுமே. ஆனால் பாலகிருஷ்ணன் பெற்ற வாக்கு 5,390ஆக உள்ளது. இதனால் அதிமுக-தமாகா கூட்டணியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)