கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக கல்யாணராமனை கண்டித்து இஸ்லாமியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறைத்தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து