அதிரையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் RMCC சாம்பியன் !!

Posted by - February 28, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் RMCC சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டனர் அதில் கலந்து கொண்ட அணியின் பரிசு விவரங்கள் முதல் பரிசு ரூபாய் .10000 RMCC அணியினர்இரண்டாம் பரிசுரூபாய். 8000 சிட்னி அணியினர் மூன்றாம் பரிசு ரூபாய்.7000 பட்டுக்கோட்டை அணியினர்நான்காம் பரிசுரூபாய். 6000 மதுக்கூர அணியினர்ஐந்தாம் பரிசு ரூபாய். 5000 விழாரிக்காடு ஆகிய அணிகள் கலந்து பரிசைப் பெற்றனர்

Read More

அதிரையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பயிற்சி மைய துவக்கவிழா !(படங்கள்)

Posted by - February 28, 2021

அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று மாலை 4.30 மணியளவில் அதிரை ALM பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அசாருதீன் வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி மையத் தலைவர் M.S. அப்துல் ரஜாக் தலைமையுரை ஆற்றினார். பயிற்சி மைய பொருளாளர் M. நெய்னா முஹம்மது,

Read More

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா முதல்வராவார் – ஏபிபி கருத்துக்கணிப்பு !

Posted by - February 28, 2021

சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம்

Read More

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – ஏபிபி கருத்துக்கணிப்பு !

Posted by - February 28, 2021

தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்கட்சியாக உள்ள திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 154 முதல் 162 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 58 முதல் 66 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே

Read More

அதிரை MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !(படங்கள்)

Posted by - February 28, 2021

அதிராம்பட்டினம் MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக ஜனாப் F. அப்சர், ஜனாப் B. சஹாபுதீன், ஜனாப் M. அப்துல் ஹாதி, ஜனாப் Q.M. அன்சாரி, ஜனாப். S. முஹம்மது மீராசாஹிப், ஜனாப் H. முஹம்மது ஜான், ஜனாப் A. சகாபுதீன், ஜனாப் S. நிஜாமுதீன், ஜனாப் A அஹமது அனஸ் ஆகியோரை தமிழ்நாடு வஃக்ப் வாரியம், வஃக்ப் சட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகிகளாக நியமித்து ஆணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து நேற்று 27/02/2021 சனிக்கிழமை அதிரை காதிர்

Read More

‘என்னை அவர்களால் தொடமுடியாது’ – ராகுல் காந்தி !

Posted by - February 27, 2021

மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனி விமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும்

Read More

அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !

Posted by - February 27, 2021

அதிராம்பட்டினம் – மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஆட்டோவின் முகப்பில் உட்கார்ந்து பயணித்த ஒருவருக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம்

Read More

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன ? – ஓர் விளக்கம் !

Posted by - February 27, 2021

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அவசியமாக அறிந்துக்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றிய தொகுப்பு இதோ : ◆தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. ◆புதிய கட்டிடங்கள்,

Read More

அதிரையில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை !

Posted by - February 27, 2021

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற செய்யது நவாஸ், பிற்பகல் 3 மணியளவில் திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்கச் சுவற்றில் ஏறி குதித்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 1/2 சவரன் தங்க

Read More

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் !

Posted by - February 27, 2021

3 நாட்களாக நீடித்த தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதில் தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதனால் மிக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)