செங்கோட்டையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை – புகைப்படத்துடன் நிரூபணம் !

Posted by - January 26, 2021

செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக வெளியான செய்தி தவறு என்று நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று, சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் நடத்திய தடியடியால் கொதித்தெழுந்த விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முறைகையிட்டு போராடினர். அப்போது

Read More

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !

Posted by - January 26, 2021

நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாகJ. முஹம்மது புஹாரியால் கிராஅத் ஓதப்பட்டுதேசிய கீதம் பாடப்பட்டது. செயலாளர் B.ஜமாலுதீன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் M. காதர் முகைதீன் சிறப்புரை ஆற்றினார். தலைவர் P.M.K. தாஜுதீன் தேசிய கொடி ஏற்றினார். மேலும்

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் இன்று (26/01/2021 ) மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமையில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது. மதுக்கூர் காவல் ஆய்வாளர் கார்திகேயன், மீனாட்சி மருத்துவமனை டாக்டர் முஹம்மது பவாஸ், டாக்டர். சாஹிமா பேகம், சமூக ஆர்வலர்

Read More

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளியில் குடியரசு தின கொடியேற்று விழா !

Posted by - January 26, 2021

இந்திய தேசத்தின் 72வது குடியரசு தின கொடியேற்று விழா பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஹாஜி காதர் முகையதீன் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. முன்னதாக நிகழ்வில் பள்ளிவாசல் இமாம் முஹம்மது ரஹ்மானி திருக்குர்ஆனை ஓதி துவக்கி வைத்தார். முஹம்மது யஹ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிவாசல் இமாம் பீர் முஹம்மது ஃபைஜி அவர்கள் குடியரசு தின விழா சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் ஹாஜி காதர் முகையதீன் வக்ப் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. முஹம்மது யூசுப் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தேசிய

Read More

மரண அறிவிப்பு : S. தைபத்துன்னிஸா அவர்கள் !

Posted by - January 26, 2021

மரண அறிவிப்பு : சாயக்காரத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ஷா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம். ஷேக் உதுமான் அவர்களின் மனைவியும், M.S. முஹம்மது சாதிக் அவர்களின் சகோதரியுமான S. தைபத்துன்னிஸா அவர்கள் இன்று காலை சாயக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு..!

Posted by - January 26, 2021

விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீச்சு சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு நண்பகல் 12மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சி குடியரசுதி தினவிழா நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் நுழைந்ததால் கண்ணீர்

Read More

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது தலைமையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சங்க செயலாளர் Rtn.A. ஜமால் முகமது தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

அதிரை : IUML அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம் !

Posted by - January 26, 2021

அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்தில் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக இந்திய விடுதலையின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களின் தியாகங்கள் நினைவு கூறப்பட்டது. பின்னர் தேசிய கொடியை ஏற்றிவைத்த நகர தலைவர் கே.கே ஹாஜா நஜிமுத்தீன் பேசுகையில், நம் முன்னோர்களின் தியாகத்தால் இந்திய நாடு விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என்றும், இன்று சிலரின் கையில்

Read More

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

நாட்டின் 72வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது. அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் தேசிய கொடி ஏற்றினார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)