‘தூய்மை பணியாளர் டூ பஞ்சாயத்து தலைவர்’ – கேரள உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண் !
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனந்தவள்ளி போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி கடந்த 10 ஆண்டுகளாக அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக வேலைசெய்துள்ளார். இந்த வெற்றி குறித்து ஆனந்தவள்ளி கூறுகையில்