அதிரையில் SDTU தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு !(படங்கள்)

Posted by - December 31, 2020

சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்(SDTU) சார்பில் வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் பணி தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், தேவைகளை தீர்த்து வைக்கும் பணியை இவ்வமைப்பு செய்து வருவதால் இவ்வமைப்பில் ஏராளமான வணிகர்கள் தங்களை இணைத்து வருகிறார்கள். அவ்வகையில் அதிராம்பட்டினத்தில் SDTU ஒருங்கிணைப்பு பணி இன்று நடந்தன. அதன் பேரில் இன்று உறுப்பினராக இணைந்த வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை அதன் அதிரை நகர பொறுப்பாளர் அபுல் ஹசன் வழங்கினார். இது குறித்து கூறிய அவர், விரைவாக

Read More

சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு !

Posted by - December 31, 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாடு முழுவதும் இதுவரை திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மத்திய கல்வி அமைச்சகமோ கட்டாயம் இந்த ஆண்டு

Read More

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - December 31, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பட்டுக்கோட்டை நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மேலும்

Read More

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

Posted by - December 31, 2020

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேரளா சட்டசபை தீர்மானம் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கையே நாசமாகும் என்பதுதான் எதிர்ப்புக்கு காரணமாகும். கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்களை கைவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல

Read More

இந்தியாவிலும் தடம் பதித்த உருமாறிய கொரோனா – 20 பேருக்கு தொற்று உறுதி !

Posted by - December 30, 2020

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதுவரை வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இப்போது தான் படிபடியாக இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிய அதிர்ச்சியாக லண்டனில்

Read More

ரஜினியின் 30 ஆண்டுகால ‘அரசியலை’ முடித்து வைத்த கொரோனா !

Posted by - December 29, 2020

தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலமாக நீடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற சஸ்பென்ஸை ஒருவழியாக கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று முடித்து வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலம் முதலே ரஜினிகாந்தின் அரசியல் வருகை பேசுபொருளாக இருந்து வருகிறது. 1990களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் வருகை என்பது விவாதத்துக்குரியதானது. 1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியே உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. காக்கா உட்கார

Read More

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - December 29, 2020

அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை 1, 2 மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் அதிரை ஆயிஷா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட

Read More

என்னை மன்னித்துவிடுங்கள் ~ ரஜினி.

Posted by - December 29, 2020

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினி தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More

மரண அறிவிப்பு : S.A.M. தாவூது இபுராஹீம் அவர்கள் !

Posted by - December 26, 2020

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் புதுத்தெரு தண்டையார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் P. முகம்மது ஹனிபா, மர்ஹூம் P. அப்துல் அஜீஸ், P. அப்துல் ரெஜாக்(மீன் வியாபாரி) ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் S.M. முகம்மது இஸ்மாயீல், M.M. முகம்மது இஸாக், N.M. நாகூர் பிச்சை ஆகியோரின் மைத்துனருமாகிய S.A.M. தாவூது இபுராஹீம் அவர்கள் முத்துப்பேட்டை பரக்கத் நகரில் உள்ள அவர்களின் இல்லத்தில் இன்று பகல் 1.30 மணியளவில்

Read More

ஆண்டிக்காடு ஊராட்சி காசிம் அப்பா தெருவில் குப்பைகள் அகற்றம்

Posted by - December 26, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,ஆண்டிக்காடு ஊராட்சி காசிம் அப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர் உதவியுடன் அகற்றினர். காசிம் அப்பா தெரு குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி இருந்த குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் வரதராஜன் உத்தரவின்பேரில் அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டது.மேலும் ஈசிஆர் சாலையில் உள்ள குப்பைகளையும் அகற்றினர்.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் குப்பைகளை போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)