அதிரைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் – திமுகவினர் உற்சாக வரவேற்பு !(படங்கள்)
2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. இப்பிரச்சாரப் பயணத்தின் ஒருபகுதியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரச்சாரத்தை துவங்கினார். நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த பிரச்சாரப் பயணத்தை இன்று மீண்டும் துவங்கினார். அதன் ஒருபகுதியாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த அவர்,