கரையை கடக்க துவங்கியது நிவர் புயல் !

Posted by - November 25, 2020

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தீவிர புயலாக மாறியது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் புயலின் முன்பகுதி கரையை கடக்க துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3

Read More

அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் பேரிடர் மீட்பு குழு ஆலோசனை கூட்டம்!

Posted by - November 25, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிவர் புயல் மீட்பு பணி ஆலோசனைகள் சம்பந்தமான கூட்டம் இந்தியன் ரெஸ்ட் கிராஸ் செக்கடி மேட்டில் உள்ள அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அகமது தலைமையில் நடைபெற்றது . இதில் நிவர் புயல் மீட்புக் குழு அமைக்கப்பட்டது தன்னார்வ குழு அமைப்பாளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது இதனை அடுத்து புதியதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களை சந்தித்து நிவர் புயல்

Read More

அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !

Posted by - November 25, 2020

நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் இனைந்து பணியாற்ற வருவாய் அலுவலர்கள் கேட்டு கொண்டனர். அதன் பேரில் கஜா புயலில் களமாடிய பேரிடர் மீட்பு குழு, SDPI,PFI,TMMK,IUML,MJK,NTK உள்ளிட்ட தன்னார்வலர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் புயலால்

Read More

சென்னை மெட்ரோ, விமான நிலையம் மூடல்… செம்பரம்பாக்கத்தில் கூடுதல் நீர் திறப்பு!!

Posted by - November 25, 2020

நிவர்’ புயல் காரணமாக மெட்ரோ சேவைகள் இன்று இரவு 7 மணிமுதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து நாளை கோயம்புத்தூர், மதுரை, மேற்கு வங்கம் செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Read More

பழுதாகி உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்..! நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம்..?!

Posted by - November 25, 2020

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு தண்ணீர் டேங்க் அருகில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் பலநாட்களாக பழுதாகி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் இதனை கடந்து செல்கின்றனர். மழை காலமாக இருக்கும் இந்நேரத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பே அதிரை மின்வாரியம் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read More

மிரட்டும் நிவர் – மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வர தடை !

Posted by - November 25, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக இன்று இரவு 8 மணிக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நிவர்: கடலோர மாவட்டங்களில் IUML ஆய்வு!

Posted by - November 25, 2020

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது, இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசும், வருவாய் அலுவலர்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் நிவாரன முகாம்கள் அமைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருலாளர் ஷாஜகான் தலைமையில் முஸ்லீம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட மக்களை

Read More

CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை !

Posted by - November 25, 2020

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை –

Read More

CYCLONE NIVAR : தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை அறிவிப்பு !

Posted by - November 25, 2020

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலால் நாளை வரை கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. நிவர் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர

Read More

நிவர்: தர்ஹா மேற்கூரை விழுந்து சேதம்!

Posted by - November 25, 2020

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலானது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் அண்ணா சாலையில் ஆறுபோல் காட்சியளிக்கிறது. இதன் எதிரொலியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள செய்யது மூசா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)