வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – நவ.25 வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை !
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதனை அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில்
திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா ? ஏன் மோடி செய்தால் பரவாதா ? – உதயநிதி கேள்வி !
திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா, ஏன் மோடி பரப்புரை செய்தால் அது பரவாதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். சுமார் 100 நாட்கள் இந்த பிரசாரத்தை அவர் நடத்தவுள்ளார். இந்த நிலையில் திருக்குவளையில் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு நாகையில் ஒரு மேடையில் உதயநிதி பேச தொடங்கினார். அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து உதயநிதி
அதிரையில் நவீன வசதிகளுடன் கூடிய PFI ஆம்புலன்ஸ் – ஓர் அப்டேட்!
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும் அதிரை மக்கள் தாங்களாக மனமுவந்து தாராளமாக நிதியுதவியளித்தனர். இதுவரை வசூலான தொகையில் முதற்கட்டமாக ஆம்புலன்ஸிற்கு தேவையான டெம்போ ட்ராவலர் வேன் வாங்குவதற்கான தொகையை இன்று காசோலையாக ஆம்புலன்ஸ் ஏற்பாட்டு குழு தஞ்சாவூர் தேவா
மதுக்கூர் அருகில் சாலை விபத்து!!
மதுக்கூர் வேப்பங்குளம் அருகில் தனியார் பேருந்தும் அசோக் லைலேன்ட் மினி லாரி ஒன்றை ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியது. பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுக்கு எவ்வித உயிர்சேதமும் இல்லை.
இந்தியாவில் வேலை நேரம் அதிகரிப்பு: பாஜக புதிய சட்டம்!!
இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன. தற்போது நாடு முழுவதும் 8 மணி நேர வேலைதான் நடைமுறையில் உள்ளது. வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனவே நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என வாரம் ஆறு நாட்களுக்கு 48 மணி நேர வேலை என தீர்மானிக்கபட்டு நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த
மரண அறிவிப்பு – அகமதுபரக்கத்துல்லாஹ் அவர்கள்!
மரண அறிவிப்பு – புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராசாகிப் அவர்களின் மகனும் முஹம்மது புஹாரி அவர்களின் மருமகனும் மர்ஹும் சமூன் ,மர்ஹும் அபுல்ஹசன் , ஜமால் முகமது இவர்களின் சகோதரரும், அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும் ,ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் , அஹமது அஸ்லம் , அஹ்மது அஷ்ரப் அவர்களின் மச்சானும் நாசர் அவர்களின் தகப்பணாரும் ஆகிய அகமதுபரக்கத்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.