BREAKING : அதிரையருகே வாலிபர் வெட்டி கொலை!

Posted by - November 4, 2020

அதிராம்பட்டினம் அருகேயுள்ள நரசிங்கபுரம் முடுக்குகாடு கிராமத்திற்கு பணி நிமித்தமாக வந்திருந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம், சித்தலைச்சேரி பகுதியை சேர்ந்த வின்செண்ட் வயது 45 என்ற வாலிபரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய வின்சென்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரனை செய்து வருகின்றனர்.

Read More

மல்லிப்பட்டிணம் கள்ளிவயல் திமுக கிளைச்செயலாளராக ஹபீப் முகமது தேர்வு…

Posted by - November 4, 2020

தஞ்சை தெற்கு மாவட்டம்,சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியம் மல்லிப்பட்டிணம்(கள்ளிவயல் தோட்டம்) கிளை செயலாளராக MKS.ஹபீப் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச்செயலாளர் நூருல் ஹமீது,துணைச்செயலாளர் (மகளிர்) ரகுமத் நிஷா,பொருளாளர் அப்துல் ரஷீத்,ஒன்றிய பிரதிநிதிகளாக காதர் முகைதீன், சபீக்கா பர்வீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Read More

இழுபறியில் அமெரிக்கா ரிசல்ட் !

Posted by - November 4, 2020

அமெரிக்க அதிபருக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று கொண்டு உள்ளன. இதில் காலை முதலே ஜோ பிடன் முன்னிலை வகுத்து வந்தார், தற்பொழுது நிலைமையோ தலைகீழாக மாறும் நிலையில் உள்ளன. சற்று முந்தைய நிலவரப்படி ஜோ பிடனுக்கும் ட்ரம்ப்க்கும் இடையே 11 இடங்கள் மட்டுமே இடைவெளி உள்ளன. அதன்படி ஜோ பிடன் 224 இடங்களையும், ட்ரம்ப் 213 இடங்களையும் பெற்று அருகருகே உள்ளனர். வெற்றி முகட்டில் இருந்த ஜோ பிடன் பின்னடைவுக்கு காரணம் என்ன என்பது

Read More

அமெரிக்கா அதிபராகிறார்? ஜோ பிடென்

Posted by - November 4, 2020

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைப்பெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223 க்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 118 க்கும் அதிகமான வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். 

Read More

XPRESS: நியூயார்க் மாகானத்தில் மண்ணை கவ்விய ட்ரம்ப்!

Posted by - November 4, 2020

78% வாக்குகளை பெற்று ஜோ பிடன் வெற்றி. அமெரிக்காவின் அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் பல்வேறு மாகானங்களில் ட்ரெம்ப்-பைடன் இருவருக்கும் கடுமையான போட்டிகள் நிலவின. இந்த நிலையில் ட்ரம்ப்பால் மிகவும் நம்பிக்கைக்குறிய மாகானமாக இருந்த நீயூயார்க் பறிப்போயி உள்ளன. இங்கு ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் 78 சதவித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

UPDATED :அமெரிக்க தேர்தல்: முன்னிலையில் ஜோ பிடன்.

Posted by - November 4, 2020

அமெரிக்காவில் அதிபரை தேர்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றன. இதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் – ஜோ பிடன் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்னிக்கை தொடங்கியது இதில் இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இண்டியானாவில் 11 எலக்டோரல் வாக்குகளை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கென்டகியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)