கொரோனாவிற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் துபாய் ஆட்சியாளர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் இன்று செலுத்திக்கொண்டார். அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசியினைப் பெற்றவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன், “அனைவரையும் பாதுகாக்கவும், அனைவரையும் குணமாக்கவும் நாங்கள் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியைப் முதன்முறையாகப் பெற்ற நாடுகளில் ஒரு நாடாக அமீரகம் திகழ்வதற்கு கடுமையாக உழைத்த குழுக்களின் முயற்சிகளை