அதிரை நகர்

அதிரை நகர்

அதிரையில் மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி -கோட்டூரார் ஹாஜாமைதீன்

Posted by - May 27, 2022
அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் கோட்டூரார் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியகம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்டசெயலாளர் முத்து.உத்திராபதி, சி.பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் புபேஷ்குப்தா, மாவட்ட குழு உறுப்பினர்காளிதாஸ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று அப்துல்நாசர்-ருகையாபானு மணமக்களைவாழ்த்தினர். இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் இந்தியகம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜாமைதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
Read More

அதிரையில் சமையல் கேஸ் கசிந்து விபத்து! தீக்கிரையான குடிசை!!

Posted by - May 23, 2022
அதிரை நெசவு தெருவில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள்…
Read More

அதிரையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை வகுப்பு நாளை துவக்கம்!

Posted by - May 20, 2022
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு…
Read More

அதிரையில் துண்டிக்கப்பட்ட சாலை! குழாய் கூட போட முடியாத பரிதாப நிலையில் நகராட்சி நிர்வாகம்!!

Posted by - May 20, 2022
கடந்த பருவமழை சமயத்தில் ஒருநாள் மழைக்கே அதிரையின் பிரதான தெருக்களில் நீர் தேங்கியது. அப்போது நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசர அவசரமாக வடிகாலை தூர்வாரினர். அந்த சமயத்தில் சேது ரோட்டிலிருந்து புதுத்தெரு தென்புறத்திற்கு செல்ல கூடிய சாலை துண்டிக்கப்பட்டது. ஆனால்…
Read More

அதிரையில் மின்சாரம் தாக்கி பலியான மாடு! மக்களின் உயிரை துட்சமென கருதுகிறதா மின்வாரியம்?

Posted by - May 19, 2022
அதிரை கீழத்தெரு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்திருப்பதாக மின்வாரியத்தில் அல் மதரஸத்துன்நூருல் முஹம்மதியா இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு புகார் அளித்தனர். ஆனால் காலங்கள் கடந்தும் அந்த புகாருக்கு மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே மழை காலத்தில் அப்பகுதியில் உள்ள இரும்பு கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் மாடு பலியான நிகழ்வை சுட்டிக் காட்டி அதிரை மின்வாரியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜாமைதீன் கடந்த மாதம் மனு அளித்தார். அதில் மக்களை அச்சுறுத்தும் இரும்பு மின் கம்பத்தை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த மனுவையும் அதிரை மின்வாரியம் கிடப்பில்போட்டுவிட்டது.  இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் பேசிய கோட்டூரார் ஹாஜாமைதீன், 19வது வார்டு பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றாமல் தனியார் நிறுவன பணிகளுக்கே அதிரை மின்வாரியம் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார். பொதுமக்களை அச்சுருத்தும் மின் கம்பங்களை உடனடியாக மாற்றியமைக்காவிட்டால் அதிரை துணை மின் நிலையத்தின் முன் மக்களை திரட்டி மிக பெரிய போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
Read More

அதிரையில் பெண் பிள்ளைகளுக்கான கோடைக்கால வகுப்பு துவக்கம்!

Posted by - May 17, 2022
அதிரை கடற்கரை தெருவில் உள்ள அர்ரவ்லா மதரஸாவில் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவிகளுக்கான சம்மர் கிளாஸ் (summer class) இன்று முதல் துவங்கி உள்ளது. 10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகுப்பு நடத்தப்படும். இன்று முதல் 20 நாட்களுக்கு காலை…
Read More

அசத்தல் பாடத்திட்டத்துடன் அதிரையில் இலவச கோடைக்கால பயிற்சி முகாம்! பெற்றோர் உடனே முன்பதிவு செய்ய அழைப்பு!!

Posted by - May 15, 2022
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்றஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகிற மே 21 முதல் ஜுன் 06 வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான…
Read More

செவிலியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்த அதிரை ஷிஃபா!

Posted by - May 13, 2022
உலக செவிலியர் தினத்தையொட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனையில் செவிலியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Dr. ஹக்கீம்.D.A., Dr. கீதா.DGO., Dr. எட்வின் .M.B.B.S., Dr. ஆதித்யா M.B.B.S., Dr. காயத்ரி.M.B.B.S., பங்கேற்று செவிலியர்களை  கவுரவித்து பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும்…
Read More

மரண அறிவிப்பு (சுபைதா அம்மாள் அவர்கள்)

Posted by - May 10, 2022
அதிரை மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த (மர்ஹூம்) முஹம்மது மின்னார் அவர்களின் மகளும், ஒரத்தநாட்டை சேர்ந்த (மர்ஹூம்) முஹம்மது உசேன் அவர்களின் மனைவியும் (மர்ஹூம்) ஹயாதுல்லாஹ் (மர்ஹூம்) குழந்தை சேக்காதி இவர்களின் சகோதரியும் முஹமது சேக்காதி அவர்களின் தாயாரும் ஒப்பு (எ)…
Read More

ஏழைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிய அதிரை தமுமுக-மமக!

Posted by - May 9, 2022
அதிரையில் நகர தலைவர் R.M.நெய்னா முஹம்மது இல்லத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  ஏழைக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. தமுமுக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினர்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)