நாட்டின் 69 குடியரசு தின விழா நாடெங்கிலும் கொண்டாடபட்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கவுரவ படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு அதிரை ரெட் கிராஸ் சேர்மன் இதிரீஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வழங்கி கவுரவித்தார், இந்த சிறப்பு மிகு விழாவில் தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் சேர்மன் ராஜமாணிக்கம், துணை சேர்மன் ஜெயகுமார், செயலர் ஜோசப் பட்டுக்கோட்டை பிச்சைமனி ஜித்தா தமிழ் சங்கத்தின் ரஃபியா, உள்ளிட்ட ஆயுடகால உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து எம்மிடம் பேசிய மரைக்கா இதிரீஸ் தாம் பெற்ற இவ்விருது அதிரை மக்களுக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என்றும் தற்கால இளைஞர் இது போன்ற பல விருதுகளை வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Your reaction