குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை வழங்கும் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை – தஞ்சை இடையே புதிய விமான வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – வேலூர் மற்றும் வேலூர் – பெங்களூரு வழித்தடத்திலும் விமான சேவைகள் உதான் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து முதன்முறையாக சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
வடகிழக்கு மற்றும் வடஇந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் , அசாம் , மணிப்பூர் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் விமான ஓடுதளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த விமான சேவைகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக பயண நேரம் கொண்ட வழித்தடத்தில் 2500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். தகவல்கள் வெளியகியுள்ளது.
Your reaction