குழந்தை செல்வமும் பெற்றோர்களின் அறியாமையும்!!

3630 0


ஆண் பெண் இரு சாராரும் மனித இனமாக இருந்தாலும் அவர்கள் வெளி அமைப்பில் இருக்கும் உடற் கூறு வேறுபாட்டை விட உடலின் உள் அமைப்பில் இருக்கும் வேறு பாடுகளே மிகவும் அதிகம்

உடலியல் உள் அமைப்பை வைத்து தான் ஒருவர் வெளித்தோற்றத்தில் ஆணா அல்லது பெண்ணா என்பதை ஆய்வு எனும் விஞ்ஞானம் முடிவு செய்யும்

அதில் ஒன்றே X Y எனும் குரோமோசோம் வேறுபாடுகள்

ஜனிக்கும் குழந்தையின் குணங்கள் நிறங்கள் இனங்கள் இவைகளின் மூலமே இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது

இதில் ஆண் பெண் இருவரிடம் உள்ள இரண்டு X எனும் அணுக்கள் தான் பிறக்கும் குழந்தையை பெண் என்றும்

X Y எனும் மாறுபட்ட உயிரணுக்கள் இணைவதின் மூலம் பிறக்கும் குழந்தை ஆண் இனமாக ஜனிக்கிறது

இதில் X Y என்ற இரு அணுக்களும் ஆண்களில் உடலில் தான் இறைவனால் அமைக்கப்பட்டு உள்ளது

பெண்களின் உடலில் X எனும் ஒரு வகை அணு மட்டுமே இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது

இந்த அணுவோடு ஆணிண் X எனும் அணுவும் இணைந்தால் பிறப்பது பெண் குழந்தை

ஆணிண் Y எனும் அணு இணைந்தால் பிறப்பது ஆண் குழந்தை

சுருக்கமாக சொன்னால் இல்லறத்தின் மூலம் பிறக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஆணிண் உடல் கூறு தான் முடிவு செய்கிறது.

அப்படியானால் ஒரு பெண் தொடர்ந்து பெண் குழந்தையை பெற்றெடுத்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் தொடர்ந்து அவளை குறை கூறுவது என்ன நியாயம் ?

நியாயப்பிரகாரம் இதில் குறை கூறுவதாக இருந்தால் மாப்பிள்ளையை குறை கூறுவது தானே முறை

வேண்டுமென்றே செய்யும் தவறுகளுக்கு தான் மனிதர்களை கூற வேண்டுமே தவிர மனிதனின் நேரடி ஆற்றலில் சுயமுடிவில் இல்லாத இது போன்றவைகளில் சண்டையிட்டு குடும்ப வாழ்வில் விவகாரங்களை விரிசல்களை ஏற்படுத்துவது விவாகரத்துகளை கேட்டு முறையிடுவது மடமைத்தனமாகும்

குழந்தை ஊனமாக பிறப்பது கருப்பாக பிறப்பது ஜோடியாக பிறப்பது குட்டையாக பிறப்பது நெட்டையாக பிறப்பது எடை குறைந்து பிறப்பது எடை நிறைந்து பிறப்பது குறை பிரசவத்தில் பிறப்பது அல்லது இறப்பது அல்லது பெண்ணை மலடியாக ஆக்குவது ஆண்களை மலடனாக மாற்றுவது இவையாவும் இறைவனின் ஆற்றலும் நாட்டமும் தான்

குழந்தை பாக்கியம் இல்லை என்று இறைவன் தீர்மானித்து விட்டால் எந்த அறிவியலாலும் மருத்துவர்களாலும் மருந்து மாத்திரைகளாலும் குழந்தை பாக்கியத்தை ஒரு போதும் தர இயலாது

ஒரு பெண் தனது கருவில் சிசுவுக்கு கண் எப்போது வளருகிறது ?

மூக்கு எப்படி வளருகிறது ?

இதர உறுப்புகள் எப்படி வளர்ச்சி அடைகிறது ?

குழந்தையின் பசி எவ்வாறு தனது உடல் மூலம் தீர்க்கப்படுகிறது ?

என்பதை கூட அறியாத விதத்தில் இருக்கும் போது பிறக்கும் குழந்தையை வைத்து பெண்மையை புகழ்பாடுவதும்

என் ஆண்மையினால் தான் குழந்தை பிறந்தது என்று ஒரு ஆண் கர்வம் கொள்வதும் தற்பெருமை அடிப்பதும் அறிவீனர்களின் செயல்பாடாகும்

لِّـلَّـهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ يَخْلُقُ مَا يَشَآءُ‌ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும் ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்
தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்
மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்
(அல்குர்ஆன் : 42:49)

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும் பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்
அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்
(அல்குர்ஆன் : 42:50)

நட்புடன் J. இம்தாதி

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: