கனரா வங்கியில் 450 புரபஷெனரி அதிகாரி வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!!

2039 0


கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 450 புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிரும் வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 450

பணி: Probationary Officer (PO)

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.708. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.118.

விண்ணப்பிக்கும் முறை:www.canarabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 04.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/media/6524/rp-2-2017-web-advertisement-english-08012018.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: