​வாகனத் தணிக்கையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்? 

2422 0


வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்து, அவைகள் சரியில்லை என்றால் அதற்கான பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். 

வாகன வழக்குகள் பதிவு செய்யும் போது சான்றுகள் சரியாக இல்லாத சந்தேகமான வாகனத்தை மட்டும்தான் காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். சரியான ஆவணங்களை ஆஜர் செய்யும் போது வாகனத்தை விடுவிக்க வேண்டும். தேவையில்லாமல் வாகனங்களை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கக்கூடாது. காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் வாகனத்தை தகுந்த பாதுகாப்பில் நிறுத்தி வைக்க வேண்டும். 

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவு செய்தால் அவரை மருத்துவ குறிப்பாணையுடன், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி குடிபோதை சான்று பெற வேண்டும். 

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரை வழக்கு பதிவிற்குப்பின் மீண்டும் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. அவரின் ஓட்டுநர் உரிமத்தை கைப்பற்றி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். ஓட்டுநர் உரிமம் உள்ள வேறு ஒருவர் அவ்வாகனத்தை ஓட்டிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

வழக்கு பதிவு செய்யும்போது அச்சிடப்பட்ட காவல்துறை அறிவிப்பு (Printed Police Notice) 2 கார்பன் வைத்து 3 பிரதிகளும் பூர்த்தி செய்ய வேண்டும். முதல் பிரதியை நீதிமன்றத்திற்கும், இரண்டாவது பிரதியை எதிரிக்கும் கொடுத்து மூன்றாவது நகல் கிழிக்கப்படக்கூடாது. மோட்டார் வாகன வழக்கு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

ஆவணம் இல்லை என வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறை அறிவிப்பு Col. 5  ல் குறிப்பிட்டுள்ளபடி, அவருக்கு ஆஜர்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும். 

Spot Fine முறை நடைமுறையில் இருந்தால் அபராதத் தொகையை வாங்கி அதற்குரிய ரசீதை உடனடியாக ஆய்வாளரை வரவழைத்துக் கொடுக்க வேண்டும். அபராதத் தொகையை குறிப்பாணையுடன் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தாமதமின்றி அனுப்ப வேண்டும். 

வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்தும்போது உரிமையாளரிடம் வாகனத்தில் ஏதாவது பொருட்கள் இருந்தால் எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். அவ்வாகனத்திற்கு பாதுகாப்பாக கிளீனரை உடன் இருக்க செய்ய வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு நேரிடையாக வந்து வழக்கை முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழைப்பாணை பெற்று, சார்பு செய்து வழக்கை முடிக்க வேண்டும். 

வாகன தணிக்கையின் போது விதிகளை மீறும் வாகனங்களை அவசியமில்லாமல் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கக்கூடாது. 

Spot Fine அபராதம் விதிப்பதற்கு காவல் ஆய்வாளர் பதவி நிலைக்கு மேலுள்ள அலுவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு  Spot Fine ரசீது புத்தகத்தை ஆய்வாளர் கையொப்பம் பெற்று உதவி ஆய்வாளர் கையில் வைத்திருக்க வேண்டும். 

Spot Fine விதித்த பின் ரசீது கொடுக்காமல் பணம் வாங்கக்கூடாது. 

Spot Fine நடைமுறையில் இல்லையென்றால் நீதிமன்றத்தில் முடிப்பதாகக் கூறி பணம் வாங்கக்கூடாது. 

(தமிழ்நாடு காவல்துறையின், காவல் உதவி ஆய்வாளர் கையேடிலிருந்து படித்து பகிரப்படுகிறது)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: