அதிரை எக்ஸ்பிரஸ்:- ரதி மீனா டிராவல்ஸ் முன்பதிவு மையத்தை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டையில் ரதிமீனா என்ற பெயரிலான தனியார் பேருந்து முன்பதிவு மையம் இயங்கி வருகிறது.
இன்று தொமுச உட்பட பல்வேறு சங்கங்களின் நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு அந்த முன்பதிவு மையத்தை சூறையாடினர். இதுகுறித்த காரணம் வெளியாகியுள்ளது.
ரதிமீனா புக்கிங் நிறுவனம், திருவண்ணாமலை- சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்லும் தனியார் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறது. இதனால் அரசு பஸ்களில் வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டதாம். இதை காரணமாக கூறி, ரதிமீனா புக்கிங் மையத்தை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஒன்இந்தியா தமிழ்
Your reaction