டிசம்பர் 26 சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

2047 0


அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

சேதுபாவாசத்திரம் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி(இடுகாடு) இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும்,அதனை கண்டித்து மாவட்டஆட்சிதலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும் ஆக்கிரமிப்பை இதுவரையிலும் ஆய்வு செய்யாத, வட்டாட்சியர் அதிகாரியை கண்டித்தும் , அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டவிரோதமாகவும் செயல்படும் போக்கினை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை திருப்பி ஒப்படைக்கவும் நீதி வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26:12:2017 செவ்வாய்க்கிழமை நடத்துகின்றனர்.

புதுத்தெரு ஜமாஅத்தின் சார்பாக நடைபெறும் அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சி , இயக்கங்கள் மற்றும் பிற சமூக மக்களையும் ஒன்றினைத்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: