Thursday, March 28, 2024

ஆ. ராசாவை ஒருமையில் மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது – 15 நாட்கள் சிறை!

Share post:

Date:

- Advertisement -

திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தம ராமசாமி கைதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பீளமேடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அப்போது பேசிய ஆ. ராசா, மனுதர்மத்தில் சூத்திரர்களை எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவாக பேசினார்.

இதனையடுத்து பாஜக, இருந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆ. ராசாவிற்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்ததுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் ஆ. ராசாவோ, நான் என் சொந்த கருத்தை பேசவில்லை. மனுதர்மத்தில் உள்ளதை தான் பேசினேன் என ஆதாரத்துடன் கூறினார்.

இதனிடையே ஆ.ராசா பேசியதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என நீலகிரி எம்.பி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

அன்னூரில் மருந்துகடை, அரிசிகடை, பூக்கடை உட்பட பல கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. அன்னூர் கடைவீதிகளில் கடைகளை திறக்க கூடாது என கூறி வலம் வந்ததாக பா.ஜ.க வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு அன்னூர் அவிநாசி ரோட்டில் உள்ள மகரிஷி மஹால் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பாக கோவை பீளமேட்டில் ஆ. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர். பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, ஆ. ராசாவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு அவரை ஒருமையில் திட்டி பேசினார். முதல்வரையும் ஒருமையில் பேசினார். இது போக அத்துமீறும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரின் பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது. மேலும் காவல் நிலையத்திலும் உத்தம ராமசாமி மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.

இதனிடையே உத்தம ராமசாமி மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினருக்கு இடையில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சிவராம் நகரில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...