சவுதியை ஆளும் மன்னர்கள் சரிந்து வரும் அவலம் !!

2511 0


சவுதி உலக நாடுகளில் எந்த விதமான வளமும் பொருளியல் நிறைவும் இல்லாது இருந்த ஒரு நாடாகும்.இறைவனை தொழுவதற்க்கு உலகில் முதல் முதலாக கட்டப்பட்ட கஃபா எனும் புனித பள்ளிவாசலும்

நபி (ஸல்)அவர்களின் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட மஸ்ஜித் நபவீ எனும் புனித பள்ளிவாசலும் ஒரு சில இஸ்லாமிய வரலாற்று சுவடுகளும் அங்கு அமைந்துள்ளது என்ற சிறப்புகளை தவிர வேறு எந்த தனி சிறப்புகளும் சவுதி எனும் நாட்டிற்க்கு விஷேசமாக இல்லை

சவுதி என்று சொன்னாலே அங்கு நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் இஸ்லாத்தை சார்ந்து என்றும் அங்கு வாழும் குடிமக்களுக்கு தான் (தக்வா ) எனும் இறையச்சம் பிற நாட்டு மக்களை விட கூடுதலாக இருக்கும் என்றும் நினைப்பதற்க்கு ஒரு ஆதாரமும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை

உலகின் பல நாடுகளில் நல்லோர் தீயோர் என்ற இரு சாரார்கள் வாழ்வதை போலவே சவுதியிலும் இருசாரார் இருக்கவே செய்வர்

அந்த நாட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் வழமையாய் கடைபிடிக்கப்படும் அழகான குற்றவியல் சட்டங்களை அஞ்சியே அரபு மக்களில் பலர்கள் வெளிரங்கமான குற்றங்களில் ஈடுபடுவது இல்லை என்பது தான் உண்மை

மற்றபடி இறையச்சத்தின் அடிப்படையில் தவறுகளை விட்டும் தவிர்ந்திருப்போர் இஸ்லாமிய அரசியல் சட்டங்கள் நடைமுறை படுத்தாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது என்பதை ஒப்பு நோக்குவோர்களால் தெளிவாகவே அறிந்து கொள்ள முடியும்

தேவைக்கு மீறிய செல்வங்களும் பதவியின் மீதுள்ள மோகங்களும் தான் அந்த நாட்டு மன்னர்களை அமெரிக்காவின் அடிமைகளாக சுய சிந்தனை அற்ற ஆட்சியாளர்களாக மாற்றி அமைத்து விட்டது

ஏனைய நாடுகளில் இருக்கும் அறிவியல் விற்பன்னர்கள் கூட செல்வ செழிப்பு மிகுந்துள்ள சவுதியில் இல்லை

உலக அளவில் முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளால் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படும் போது வலிமை இல்லாத ஏனைய நாட்டு குடி மக்கள் பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்வதை போல் தான் சவுதி அரசாங்கமும் பாதிப்படைந்த நாடுகளுக்கு உதவிகளை வழங்குவார்களே தவிர

அக்கிரம் புரிந்த நாடுகளை கடுமையாக கண்டித்தும் கூட மீடியாக்களை அழைத்து அறிக்கை தர மாட்டார்கள் காரணம் அவ்வாறு அறிக்கை தந்தால் தங்களுடைய ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பதவி மோகமும் கோழைத்தனமும் தான் இதற்க்கு அடிப்படை காரணம்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் பலஸ்தீன் முஸ்லீம்கள் இன்னும் இது போன்ற பல நாட்டு முஸ்லிம்கள் கடுமையாக தாக்கப்பட்டு வரும் சூழலில் கூட மவுனம் காப்பது தான் சவுதி அரசாங்கத்தின் கை வந்த கலை

 

சவுதி அரசாங்கத்தின் தொலைகாட்சி அடையாளத்தில் மாத்திரம் வீரத்தின் சாட்சிகளாக இரண்டு வாள்களை வைத்துள்ளார்களே தவிர நபிகள் நாயகம்( ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த வீரமும் விவேகமும் மருந்துக்கு கூட இல்லை என்பதை அவர்களின் நடவடிக்கை பறைசாற்றுகிறது

கஃபாவை சுற்றி இபாதத் எனும் வணக்கத்தை நிறைவேற்றும் போது கூட செல்பி மோகத்தால் இபாதத்தின் நன்மைகளை நாசமாக்கும் முஸ்லிம்களை கண்டிக்காத சவுதி அரசாங்கம் தற்போது சவுதியில் சினிமா தியேட்டர்கள் உருவாக்குதற்க்கு அனுமதி வழங்கி இருப்பதில் ஆச்சரியம் இல்லை

இது நாள் வரை ஒழுக்க கேடுகளை வளர்க்கும் சினிமா தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் சவுதியில் வாழும் குடிமக்கள் எவரும் புலம்பியது இல்லை

ஆனால் எவ்வித பயனும் தராத விளைவுகளை மட்டுமே ஏற்படுத்த கூடிய சினிமாக்களை கற்பனைகளை காட்டுவதற்க்கு திரையரங்கத்திற்க்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று சொன்னால் சவுதியை ஆளும் தற்போதைய அரசாங்கம் எந்தளவு ஈமானின் காவலர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் வாழும் போது செய்த (கியாமத் நாள் தொடர்பான) முன்னறிவுப்புகளை இன்னும் விரைவாக சவுதியை ஆளும் மன்னர்கள் கூடிய விரைவில் நிறைவேற்றுவார்கள் என்பது ஊர்ஜிதமாகி விட்டது

 

புனித பூமியை புனிதர்கள் ஆளும் காலம் சென்று தற்போது புனித பூமியை மக்கள் வெறுக்கும் நபர்கள் ஆளும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது

எதுவானாலும் அந்த பூமியின் மகிமையை இறைவன் நாடும் காலம் வரை கண்ணியப்படுத்தியே வைப்பான் காரணம் அந்த புனித பூமி இன்று வரை பாதுகாப்பு பெற்று இருப்பது இறைவனின் நேரடியான கண்காணிப்பில் தானே தவிர சவுதியை ஆளும் மன்னர்களால் அல்ல என்பதை மட்டும் உலக முஸ்லிம்கள் நினைவில் வைத்தால் போதுமானது

 

7053 — தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும்
ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸஹீஹ் புகாரி

 

4085. உக்பா பிர் ஆமிர்(ரலி) அறிவித்தார்
அல்லாஹ்வின் மீதாணையாக என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை
ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொவர் (போட்டியிட்டுக் கொண்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன் என்று கூறினார்கள்

 

ஸஹீஹ் புகாரி

விரைவில் சவுதியும் சிர்கை நோக்கும் நபிகளாரின் முன்னறிவிப்பு
———————–

7116 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது
துல்கலஸா என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும்

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி

 

நட்புடன் J . இம்தாதி

முற்றும்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: