அதிரை KMC கல்லூரியின் 67ஆம் ஆண்டு விழா – ஆளுர் ஷாநவாஸ் MLA பங்கேற்றார்-

684 0


அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் 67ஆம் ஆண்டு கல்லூரி விழா 11-06-2022 அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளர் மீரா சாஹீப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நாகை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மற்றும் ,வக்ஃப் வாரிய குழு உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி என்பது தன்னலம் பாராத அன்றைய நல்லோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் இவ்வளவு ஆண்டு காலம் கல்வி சேவை வழங்கி வருகிறது என்றால் இக்கல்லூரியில் பயின்று சென்ற மாணாக்கர்கள் வாழ்வில் உயர்ந்த எல்லைகளை அடைந்திருப்பார்கள்.

அவர்களின் பால் மற்றவர்களுக்கு கல்வி பயிற்ச்சி அழைக்கப்படும் ஒவ்வொரு நபர்கள் மூலமாகமகவும் இதன் நிறுவனர்கள், நிச்சயமாக இறைவனின் புறத்தில் இருந்து நன்மைகளை குவித்து கொண்டிருப்பார்கள் என்றார்.

குறிப்பாக அன்று முதல் இன்று வரையிலான தமிழக அரசியலும் கல்வியை மையப்படுத்திய அரசாகவே இருந்து வருகிறது என்றும், இந்திய அளவில் உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 51.4 சதவீதமாக இருக்கிறது என்றார்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நமது மாநிலம்தான் இந்த இலக்கை அடைருக்கிறது என்றால் நமது முன்னோர்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துமாகத்தான் இருக்க முடியும் என்றார்.

முன்னதாக விருந்தினர்களை கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர் வரவேற்றார்.

இந்த விழாவில் முன்னாள் செயலர் சரபுதீன்,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவ,மாணவியர்கள்,பொதுமக்கள் என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: