50 சதவீதம் மானியத்துடன் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க தேதியை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி
தற்போது ஆர்.கே நகர் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதால்,அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வரும்முதல்வர் மற்றும் துணை முதல்வர் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.
அதிமுக சார்பாக வேட்பாளராக உள்ள மதுசூதனனுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது
இதனை தொடர்ந்து பிரசாரத்தின் போது ஜெயலலிதா பிறந்த நாள் முதல் 50 சதவீத மானிய விலையில் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்
அதிமுக வெற்றி பெற்றால்,‘ஆர்.கே.நகர் தொகுதியில் வீடுகள் இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், படித்த இளம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டு உள்ளது
ஜெயலலிதா பிறந்த நாள் பிப்ரவரி 24-ந் தேதி வருகிறது. அன்று முதல் ரூ.20 ஆயிரம் மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கப்படும்.இதற்கு படித்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
Your reaction