
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கான பயிற்சி முகாம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிரை நகராட்சி தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், துணை தலைவர் இராம.குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து எம்.எம்.எஸ். அப்துல் கரீம், இராம.குணசேகரன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.
Your reaction