மரண அறிவிப்பு – ஜரினா அம்மாள் வயது (38)

734 0


பேராவூரணி பகுதியை சேர்ந்த ஜரினா வயது 38 இவர் அதிராம்பட்டினம் புதுத் தெரு ஜஃபருல்லா என்பவரை மணம் முடித்திருந்தார்.

முடக்குவாதம், கண்பார்வை கோளாறு உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட இவரின் கணவர் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியே வாழ்ந்த இவருக்கு 100 சதவீத பார்வை குறைபாடு முடக்கு வாதத்தால் எழுந்து நடக்க இயலாமை ஆகியவற்றால் ஜரினா பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனை அடுத்து தமுமுக அஹமது ஹாஜா தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ உதவி குழு மூலமாக அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக நிதி திரட்டப்பட்டு மருத்துவ செலவுகள் செய்து வந்த நிலையில், இன்று (03-04-2022) இரவு வஃபாத்தாகி விட்டார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நல்லிரவு 12 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெற்றது.

மரணித்த ஜரினாவின் இரண்டு பெண் பிள்ளைகளும் தற்போது வரை அஹமது ஹாஜா அவர்களின் மனைவி சவ்தா, கண்காணிப்பில் உள்ள்து என்றும், ஜரினாவின் இரத்த உறவுகள் தஞ்சையில் உள்ளனர் என்றும் விரைவில் அவர்களின் ஆலோசனைக்கு பின்னர் அடுத்த கட்ட முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த ஜனாசாவில் மறைந்த ஜஃபருல்லாவின் மச்சான்களான அக்பர் அலி, சேக் நஸ்ருதீன் கலந்து கொண்டனர்.

மேலும் ஜரினாவிற்கென்று அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரான தமுமும அஹமது ஹாஜா, சாந்தா சாகுல் ஹமீது,அக்பர்,ஹாலிது,சலீம்,ஹசன்,ராவுத்தர் உள்ளிட்ட ஊர் ஜமாத்தார்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜரினாவின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்ட நிதியின் செலவு கணக்குகள் உள்ளது, என்றும் மருத்துவ குழுவினர் விரைவில் அதனை பொது தளத்தில் வெளியீடு செய்ய உள்ளதாக ஜரினாவின் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

விரைவில் ஜரினாவின் இரத்த உறவுகள் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ஜரினாவின் மஃபிரத்து நல் வாழ்விற்க்கும், இரண்டு பிள்ளைகளின் எதிர் கால நலனுக்கும் பிரார்த்திப்போமாக.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: