
அதிரையின் அடையாளங்களில் ஒன்றாக MMS குடும்பம் திகழ்கிறது. மஸ்தான்-மிஸ்கீன்-சேக்நசுருதீன் ஆகியோரது பெயரின் முதல் எழுத்துக்களை கொண்ட இந்த குடும்பத்தின் 7வது தலைமுறை இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் சமூகநல பணிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அதிரை நகரில் தங்களது சொந்த செலவில் தூய்மை பணியை மேற்கொண்டனர். முதற்கட்டமாக மேலத்தெருவில் இருந்து சி.எம்.பி லேன் வரை ஜே.சி.பி மூலம் தூய்மை பணியையும் சாலையை சமன் படுத்துதல் பணியையும் மேற்கொண்டனர். இந்த பணி இனி வரக்கூடிய காலங்களிலும் அதிரை நகர் முழுவதும் தொடருமென MMS குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Your reaction