அன்பிற்கினிய அதிராம்பட்டினம் நகர பொதுமக்களே உங்கள் அனைவரின் மீதும் ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக என்ற பிரார்த்தனையுடன் இம்மடலை வரைகிறேன்.
அன்பார்ந்த உறவுகளே கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம் சார்ந்துள்ள திமுகழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றிக்கு பின்னர் உங்களின் சகோதரியாக என்னை நகர் மன்ற தலைவியாக அமரவைத்து அழகு பார்கின்றீர்கள் அதற்கு முதற்கண் நான் சார்ந்துள்ள வார்டு மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன், உங்களின் அன்புக்கும் கட்டளைக்கும் இணங்கி நகர வளர்ச்சிக்கு கழகத்தின் உறுதுணையோடு நிச்சயமாக பங்காற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
மேலும் நமது நகரத்தின் வளர்ச்சி,மேம்பாடு, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்களாகிய உங்களிடம் இருந்து நான் ஒத்துழைப்பை உரிமையோடு கேட்கிறேன்.
நீங்கள் அளிக்கும் ஆதரவும், ஒத்துழைப்பால் மட்டுமே நமது நகரமும், மக்களின் வாழ்வும் மேம்படும்.
பாகுபாடு அற்ற ஒளிவு மறைவில்லாத நிர்வாகத்தை கட்டமைத்து 100℅ மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட முன்னேற்ற கழக அரசின் நல்ல பல திட்டங்களை பெற்றுத்தர நானும், உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் செயல்பட உங்களின் பிராத்தனைகளை எதிர்நோக்கி இருக்கின்றேன்.
மேலும் நகர்மன்றம் தொடர்பாக எந்த உதவிக்கும் என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்.
இப்படிக்கு,
உங்கள் சகோதரி
MMS தாஹிரா அம்மாள்,
நகர் மன்ற தலைவர்,
அதிராம்பட்டினம் நகராட்சி.
Your reaction